தக் லைப் - ஓடிடி ரிலீஸ் குறித்து, அன்று பாராட்டு, இன்று அபராதம் | தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் | சினிமாவிலும் 'போதைப் பொருள்' கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்கள் | 48 மணி நேரத்தில் தயாரான படம் | 'ஹரி ஹர வீரமல்லு' ஜூலை 24ல் ரிலீஸ்: உறுதியான அறிவிப்பு | உடன் நடித்த குழந்தைகளின் அம்மாக்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா | பிளாஷ்பேக்: கண்ணாம்பாவிற்கு பிறகு வசனத்தால் புகழ்பெற்ற சுஜாதா | பிளாஷ்பேக் : தலைப்பை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் | அஜித்துக்கு என்னாச்சு : இப்படி மாறிட்டாரே? |
தமிழ் சினிமாவில் விஜய்யின் மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் அட்லி. ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய 'ஜவான்' ஹிந்திப் படம் 2023ல் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனரானார் அட்லி.
அவரது அடுத்த படத்தில் நடிக்கப் போவது சல்மான் கானா, அல்லு அர்ஜுனா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இப்போது அல்லு அர்ஜுன் அவரது படத்தில் நடிக்க உள்ளார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இப்படத்திற்கான கதை விவாதம், முன்தயாரிப்புப் பணிகள் ஆகியவை துபாயில் நடந்து வருகிறது. அங்குள்ள பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இதற்கான பணிகளை அட்லி தனது குழுவினருடன் செய்து வருகிறார். அங்கேயே அல்லு அர்ஜுனும் தங்கியுள்ளதாகத் தகவல். அவரது தோற்றம் குறித்த ஆலோசனையில் அவர் உள்ளாராம். கடைசி கட்டத்தில் உள்ள இந்த ஆலோசனை விரைவில் முடிவடைந்து படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.