டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இந்துக்கள் அனுசரிக்கும் விரதங்களில் முக்கியமானது 'ஏகாதசி விரதம்'. இதனை வலியுறுத்தி 'ருக்மாங்கதன்' என்ற படம் வெளியானது. ஏகாதசி விரதம் குறித்து பல புராண கதைகள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது நாரதர் புராணத்தில் சொல்லப்படும் கதை. அந்த கதையையைத்தான் படமாக எடுத்தார்கள்.
1947ல் வெளிவந்த இந்தப் படத்தில் ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.ஆர்.ராமச்சந்திரன், சி.நாராயணராவ், மங்களம், பி.ஏ.பெரியநாயகி, சி.டி.ராஜகாந்தம், பி.ஏ.ராஜாமணி ஆகியோர் நடித்தனர். ராமநாதன் இசைக்கு பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதினார். பி.எஸ்.வி.ஐயர் தயாரித்து, இயக்கி இருந்தார்.
சூர்யவம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வருகிறான். குறிப்பாக குடிமக்கள் விரதங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். நாட்டில் எல்லோருமே ஏதாதசி விரத்தை கடைபிடிப்பதால் எல்லோரும் நேரடியாக சொர்கத்துக்கு சென்று விடுகிறார்கள். இதனால் எமதர்மராஜனுக்கு வேலை குறைகிறது. இது குறித்து இந்திரனிடம் எமன் புகார் சொல்ல மோகினி என்ற அழகியை இந்திரன் பூமிக்கு அனுப்பி ருக்மாங்தன் விரத்தை கலைத்து வருமாறு கட்டளையிடுகிறான்.
ஆனால் மோகினியால் மன்னனை மயக்கி அவன் விரதத்தை கலைக்க முடியவில்லை. இட்ட கட்டளையை நிறைவேற்றாமல் போனால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று மோகினி மன்னனிடம் புலம்ப என்ன வேண்டுமானாலும் கேள் ஆனால் விரதத்தை கைவிட மாட்டேன் என்கிறான் மன்னன். மோகினியோ உங்கள் மகனின் உயிரைத் தர முடியுமா? என்று கேட்கிறாள். சற்றும் யோசிக்காத மன்னன் தன் வாளால் மகனை கொல்ல முயற்சிக்கும்போது தேவர்கள் வானில் தோன்றி மன்னா உன் விரத வைராக்கியத்தை பரிசோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தினோம். என்கிறார்கள்.
இந்த படத்திற்கு பிறகு ஏகாதசி விரதம் பிரபலமடைந்து பொதுமக்களும் ஏதாகசி விரதம் அனுசரிக்கத் தொடங்கினார்கள்.




