நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கின்றார். சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இந்த படத்திற்கு 'ஆகாச வீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ. 22 கோடிக்கு கைபற்றியுள்ளதால் இத்திரைப்படத்தை இவ்வருட மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனராம்.