நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

2005ம் ஆண்டில் தாணு தயாரிப்பில், இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'சச்சின்'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். ரஜினியின் சந்திரமுகி படத்தோடு இப்படம் வெளியானது. இதனால் சச்சின் படம் அப்போது எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
ஆனால் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற விஜய், வடிவேலுவின் காமெடி, பாடல்கள் ஆகியவை ரசிக்க வைத்தன. இப்போதும் டிவிக்களில் இந்தபடம் ஒளிபரப்பானால் அதை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் சச்சின் படத்தை ஏப்ரலில் மறு வெளியீடு செய்ய போவதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தனர். தற்போது வருகிற ஏப்ரல் 18ம் தேதி அன்று படம் ரீ ரிலீஸ் ஆகிறது என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.