காதலியுடன் பொது நிகழ்வில் முதல்முறையாக ரவி மோகன் | 'கைதி 2' படத்திற்குப் பிறகு 'ஹிட் 4'ல் நடிக்க உள்ள கார்த்தி | 'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி |
சூர்யா நடிப்பில் அடுத்து ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்க, சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களாக இந்த படத்திற்காக ஈ.சி.ஆரில் பிரமாண்டமான கிராமம் போன்ற அரங்கம் அமைத்து 500 நடன கலைஞர்களுடன் சூர்யா, த்ரிஷா இணைந்து நடனமாடியதை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை ஷோபி மாஸ்டர் இயக்கியுள்ளார்.