'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான வார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். அயன் முகர்ஜி இப்படத்தை இயக்குகிறார்.
ஏற்கனவே இந்த படம் இவ்வருட ஆகஸ்ட் 14ந் தேதி அன்று திரைக்கு வருவதாக அறிவித்திருந்தனர். இதே தேதியில் லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். வார் 2 படத்தோடு வெளியானால் கூலி படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் போதுமான திரைகள் கிடைக்காது என விநியோகஸ்தர்கள் யோசித்த நிலையில் தற்போது ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் வார் 2 படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸில் இருந்து தள்ளிப்போகிறது என கூறப்படுகிறது. இதனால் கூலி படத்திற்கு ஜாக்பாட் தான். அன்றையதினம் போட்டிக்கு வேறு பெரிய படங்கள் வெளியாகாது என தெரிகிறது.