ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் இப்போதைக்கு முன்னேறிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இந்த வருடத்தில் அவரது இசையில் இதுவரையில் 'வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், கிங்ஸ்டன்' ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. மூன்றுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவரது இசையைப் பற்றி பாசிட்டிவ்வான விமர்சனங்களே வெளிவந்தன.
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக உள்ள மூன்று முக்கிய வெளியீடுகளுக்கு ஜிவி பிரகாஷ்குமார் தான் இசையமைத்துள்ளார். அடுத்த வாரம் விக்ரம் நடித்து வெளியாக உள்ள 'வீர தீர சூரன் 2', அடுத்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி, இட்லி கடை' ஆகிய படங்களுக்கும் ஜி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
அதோடு, அடுத்த வாரம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள 'ராபின்ஹுட்' தெலுங்குப் படத்திற்கும் இசை ஜிவி பிரகாஷ்குமார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தப் படங்களின் வேலைகள், புரமோஷன்கள் என ஜிவி பிரகாஷ் மிகவும் பிஸியாக இருக்கிறார்.