2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
தனுஷ் இயக்கி நாயகனாக நடிக்க உடன் நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'இட்லி கடை'. ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள்.
ஆனால், படம் பற்றிய அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகவில்லை. அதே தினத்தில் வெளியாக உள்ள அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் புரமோஷனை பரபரப்பாக ஆரம்பித்துள்ளார்கள். சிங்கிள் ரிலீஸ் என்றெல்லாம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.
ஆனால், இன்னும் இருபது நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 'இட்லி கடை' பற்றி எதுவும் வராமல் இருப்பது தனுஷ் ரசிகர்களை சந்தேகத்தில் தள்ளியுள்ளது. திட்டமிட்டபடி ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகாமல் தள்ளிப் போகுமா என்பதும் தெரியவில்லை. இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.
ஆனால், 'குட் பேட் அக்லி' பற்றி தானாகவே அப்டேட் கொடுத்த ஜிவி, 'இட்லி கடை' பற்றி மட்டும் தானாக எதுவும் சொல்லாமல் இருக்கிறாரே என்றும் கேள்வி எழுந்துள்ளது.