‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

தமிழ், மலையாள சினிமாவில் அடுத்த வாரம் தலா ஒரே ஒரு முக்கியமான படம்தான் வெளியாகிறது. தமிழில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படமும், மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படமும் வெளியாகிறது.
'எல் 2 எம்புரான்' படத்தை மலையாள சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவு பிரம்மாண்டமான வெளியீடாகத் திரையிட உள்ளார்கள். கேரளாவில் உள்ள 777 தியேட்டர்களில் 700 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு தியேட்டர்களையும் 'எல் 2 எம்புரான்' படம் ஆக்கிரமித்துவிட்டால் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படத்திற்கு கேரளாவில் மிகக் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும்.
மேலும், 'எல் 2 எம்புரான்' படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் முதல் பாகமான 'லூசிபர்' படத்திற்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விக்ரமின் 'வீர தீர சூரன் 2' படத்திற்கு தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் கிடைத்தாலும் 'எல் 2 எம்புரான்' போட்டியை எதிர்கொண்டே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.