என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் ஒரு நடிகையாகவும், அதிக சொத்துக்களை உடையவராகவும் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் பிரியங்கா.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிஷா மாநிலத்தில் உள்ள கோராபுட் என்ற இடத்தில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன்பாக அமெரிக்கா செல்வதற்காக விசாகப்பட்டினம் விமானநிலையத்திற்கு கார் ஓட்டிச் சென்றுள்ளார் பிரியங்கா. அப்போது 'கொய்யா' விற்ற பெண் ஒருவர் தன்னை ஊக்கப்படுத்தியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
அதில், “இன்று நான் மிகவும் ஊக்கப்படுத்தப்பட்டேன். மும்பை வழியாக அமெரிக்கா செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையம் வரை கார் ஓட்டிக் கொண்டு சென்றேன். வழியில் ஒரு பெண் கொய்யா விற்றதைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். அந்தப் பெண்ணிடம் என்ன விலை என்று கேட்டேன் 150 ரூபாய் என்றார். நான் அவரிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவருடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர் கொய்யா விற்கிறார். நான் பணம் கொடுத்ததும் அவர் போய்விட்டார். இருந்தாலும் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறுவதற்குள் அவர் என்னிடம் திரும்பவும் வந்து மேலும் இரண்டு கொய்யாக்களைக் கொடுத்தார். வேலை செய்யும் பெண், அவர் தர்மத்தை விரும்பவில்லை,” என்று பேசியுள்ளார்.