சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ள மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. ஆனால், கடந்த வாரம் இப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் விலகியதாக தகவல் வெளியானது. அவர்களது பங்கு மொத்தத்தையும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் வாங்கியதாகச் சொன்னார்கள்.
மோகன்லால், இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவுகளில் லைக்கா நிறுவனப் பெயரை 'டேக்' செய்யவில்லை.
இதனிடையே, இன்று வெளியான டிரைலர்களில் ஆரம்பத்திலேயே லைக்கா லோகோ இடம் பெற்றுள்ளது. அதோடு தயாரிப்பாளர் பெயரில் சுபாஷ்கரன் பெயரையும் சேர்த்துள்ளார்கள். ஆனால், யூடியூப் தளத்தில் டிரைலருக்கான விளக்கத்தில் இடம் பெறும் கலைஞர்கள் பெயர்களில் லைக்கா பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்த டிரைலரையும் லைக்கா நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிடவில்லை. என்ன நடந்தது என்பது குறித்து படக்குழுவில் சம்பந்தப்பட்ட யாருமே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.