சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட்டின் சீனியர் ஹீரோவான அமிதாப்பச்சன் இந்த 2024 - 25 நிதியாண்டில் சுமார் 350 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளாராம். அதற்கான வரியாக 120 ரூபாய் வரை கட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கடைசி கட்டமாக 52 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தியுள்ளார்.
சினிமாவில் நடிப்பது, விளம்பரங்களில் நடிப்பது, டிவி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என அவரது வருமானம் இருந்து வருகிறது. முன்பெல்லாம் இந்திய சினிமா நடிகர்கள் வருமான வரியை வருடா வருடம் கட்டாமல் பாக்கி வைப்பது வழக்கம்.
நிதியாண்டு முடிந்த பின் அதை வருமான வரித் துறை ஒரு பெரிய பட்டியலாகவே வெளியிடும். ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைத்து நடிகர்களும் வருமான வரியை ஒழுங்காகவே கட்டிவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பாக்கி வைக்கிறார்கள் எனத் தகவல்.
இந்திய அளவில் இந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பதாகத் தகவல். அவருக்கு அடுத்து விஜய், ஷாரூக்கான், ரஜினிகாந்த், ஆமீர்கான், பிரபாஸ், அஜித், சல்மான்கான், கமல்ஹாசன் ஆகியோர் உள்ளனர்.