முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் |

குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் சமீபத்தில் ரக்ஷித் சவுரசியா என்கிற இளைஞன் குடித்துவிட்டு மதுபோதையில் 120 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கே நின்று கொண்டிருந்த பெண் உள்ளிட்ட ஐந்து பேர் மீது மோதியது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞன் காரில் உள்ள ஏர்பேக் உதவியால் காயம் இன்றி தப்பித்தான். அதே சமயம் மோதி நின்ற காரில் இருந்து இறங்கிய அவன் இன்னொரு ரவுண்டு போகலாமா என்று கேட்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
போலீசார் அவனை கைது செய்து விசாரித்ததில் சாலையில் விழுந்து கிடந்த பாட்டில் ஒன்றின் மீது கார் ஏறியதால் அந்த தடுமாற்றத்தில் ஏர்பேக் தானாக விரிந்து தன் முகத்தை மூடி விட்டது என்றும் இதனால் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். இதற்கு பலரிடமிருந்தும் கண்டனம் வெளிப்பட்டு வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் தனது கடுமையான கண்டனத்தை தெரியப்படுத்தியுள்ளார். “இந்த நிகழ்வு பயங்கரமானது மட்டுமல்ல.. கோபம் ஏற்படுத்தக் கூடியதும் கூட.. இந்த மாதிரியான நடத்தையினால் போதையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரேனும் தப்பித்து விடலாம் என்று நினைப்பது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




