சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் | மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் | தமிழில் ஹீரோவான இலங்கை ராப் பாடகர் | இயக்குனரான ராகவ் ரங்கநாதன் | சத்தமின்றி வெளியான 'தண்டர்போல்ட்ஸ்' |
தனுஷ் தற்போது ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏப்ரல் அல்லது மே துவங்கும் படப்பிடிப்பு என்கிறார்கள். இதில் கதாநாயகியாக நடிக்க பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவானது என்பதை கதைக்களமாக கொண்டு உருவாகிறதாம். இப்படத்திற்கு '760 சிசி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்க பிரேமலு பிரபலம் மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜூ ஏற்கனவே வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வந்தார். அதன்பின் அதிலிருந்து சூர்யா, மமிதா இருவரும் வெளியேறினர்.
மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகையான மமிதா தமிழிலும் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். தமிழில் ரெபல் படத்தில் நடித்த இவர் இப்போது ஜனநாயகன், இரண்டு வானம் போன்ற படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.