சூர்யா மீது கோபத்தில் இருக்கிறாரா கவுதம் மேனன் | அமீர்கானின் 'சிதாரே ஜமீன் பர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | த்ரிஷாவின் இரண்டு ஆசைகள் | மீண்டும் குடும்பஸ்தன் கூட்டணி | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் 'சோட்டா மும்பை' | ரஜினியிடம் என்னை ஆர்யா மாட்டிவிட்டான் : சந்தானம் கலகல | வெள்ளிக்கிழமை நாயகன் ; நடிகர் பசில் ஜோசப்புக்கு பட்டம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | சூப்பர்மேன் கதையுடன் இயக்குனராக அறிமுகமாகும் உன்னி முகுந்தன் | இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா |
சித்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வீர தீர சூரன். எச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. விக்ரம் கதாநாயகனாக, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுராஜ் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. வரும் மார்ச் 27ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அப்படி ஒரு நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டபோது நடிகர் சுராஜ் கூறுகையில், “விக்ரமுக்கு மேக்கப் மேன் மும்பையில் இருந்து வந்தார்கள்.. ஆனால் எனக்கு மேக்கப் மேன் என்றால் அது விக்ரம் தான். எனக்கு மட்டுமல்ல எஸ்ஜே சூர்யாவிற்கும் கூட அவர்தான் மேக்கப். எங்களுக்கு மேக்கப் போடும் போதெல்லாம் அவர் கூடவே உதவிக்கு வந்து நின்று விடுவார்” என்று கூற எஸ்.ஜே சூர்யாவும் அதை ஆமோதித்தார். அதுமட்டுமல்ல சுராஜ் பேசும்போது, “என்னுடைய தந்தை மிலிட்டரி.. அண்ணன் மிலிட்டரி.. நான் மிமிக்ரி” என்ற காமெடியாக ரைமிங்காக பேச அதை கேட்ட விக்ரம் நான் உங்கள் ரசிகனாகி விட்டேன் என்று கூறினார்.