பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எம்புரான்'. கடந்த 2019ல் இவர்கள் கூட்டணியில் உருவான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சமீபத்தில் இதன் இயக்குனர் பிரித்விராஜ் ரஜினிகாந்தை சந்தித்து முதல் நபராக அவருக்கு இதன் டிரைலரை போட்டு காட்டினார்.
இந்த நிலையில் மோகன்லால் சபரிமலை சென்று ஐயப்பன் தரிசனம் செய்துள்ளார். இதற்காக பம்பையில் இருந்து அவர் நடந்தே சன்னிதானம் வரை சென்றுள்ளார். மேலும் அவர் மம்முட்டியின் நிஜப்பெயரான முகமது குட்டி என்கிற பெயரை கூறி விசாக நட்சத்திரம் என்று சொல்லி அவர் பெயரிலும் அர்ச்சனை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அவர் மம்முட்டியுடன் கூறிவிட்டு சென்றதாகவும் அதேபோல அவரது பெயரில் அர்ச்சனை செய்வதற்கு முன்கூட்டியே டோக்கன் பதிந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நேற்று வழிபாடு நடத்திய மோகன்லால் இன்று காலை மீண்டும் கொச்சிக்கு திரும்புகிறார் என்றும் தெரியவந்துள்ளது. ரிலீஸ் ஆகப்போகும் தனது படத்திற்காக மட்டுமல்லாமல் தனது நண்பரான மம்முட்டிக்காகவும் மோகன்லால் வழிபாடு செய்தது இருதரப்பு ரசிகர்களிடமும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.




