சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி | தனுஷ், சூர்யாவிற்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | ஹேமா கமிஷன் அறிக்கை : கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு |
கன்னட தொலைக்காட்சி முன்னணி நடிகை மேகா ஷெட்டி. 'ஜோதே ஜோதேயலி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' , 'ஆப்டர் ஆபரேஷன் லண்டன் கபே' , படங்களில் நடித்தார். தற்போது 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'காளையன்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது "தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. சினேகா, நதியா போன்று கதை அம்சமுள்ள படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர வேண்டும். ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.