இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி |
சமீபகாலமாக புதிய படங்கள் ஓடுகிறதோ இல்லையோ ஏற்கனவே வெளியான படங்களை ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ஏற்கனவே கில்லி, வாரணம் ஆயிரம், 3 உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின. அடுத்து சச்சின், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களும் ரீ-ரிலீஸாக உள்ளன.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், ரீமாசென், வடிவேலு, ஜெய் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த படம் 'பகவதி'. விஜய் நடித்து வெளிவந்த முழு ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால், அந்த காலகட்டத்தில் பெரிதளவில் வெற்றி படமாக அமையவில்லை.
22 ஆண்டுகளுக்குப் பிறகு பகவதி படம் வருகின்ற மார்ச் 21ம் தேதி அன்று தமிழகத்தில் மதன் மூவிஸ் என்கிற விநியோக நிறுவனம் ரீ ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இந்த சம்மருக்கு விஜய்யின் சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்தனர். தற்போது இதற்கு முன்பே பகவதி படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.