நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் |

தெலுங்குத் திரையுலகத்தில் சில பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பூரி ஜெகன்னாத். ஆனால், அவர் கடைசியாக இயக்கிய 'லைகர், டபுள் இஸ்மார்ட்' ஆகிய படங்கள் சரியாகப் போகாமல் படுதோல்வி அடைந்தன. அதனால், அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கு ஹீரோக்கள் யோசித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை பூரி ஜெகன்னாத் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் பூரி. அந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதி, கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். அதனால், இந்தப் படத்தையும் பான் இந்தியா படமாக உருவாக்க பூரி முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.