இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வலம் வருபவர் நீரஜ் மாதவ். மிக பிரபலமான காமெடி நடிகர் அஜு வர்கீஸ். இருவரும் இணைந்து நடித்துள்ள லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்சன் என்கிற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது. இதில் கதாநாயகியாக 96 புகழ் கவுரி கிஷன் நடித்துள்ளார். விஷ்ணு ராகவ் இயக்கியுள்ளார். 6 எபிசோடுகளை உள்ளடக்கி இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ளது. இதை பார்த்துவிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பாராட்டுக்களை படக்குழுவதற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்சன் வெப்சீரிஸ் பற்றி சில விஷயங்களை நான் சொல்லியே ஆக வேண்டும். மென்மையான கதை அம்சம் கொண்ட, நகைச்சுவை கலந்த, அதேசமயம் அழகான உணர்வுபூர்வமான ஒரு கதையாக இதை கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணு ராகவ் அருமையான திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக பப்பேட்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஜு வர்கீஸ் ஒரு கலகமே செய்திருக்கிறார். கவுரி கிஷன் தனது கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக இந்த வெப் சீரிஸ் முழுவதும் கொண்டு சேர்ந்து இருக்கிறார். இந்த பீல்குட் வெப் சீரிஸ் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
வெளிநாட்டிலிருந்து பணம் சம்பாதித்து விட்டு வந்து சொந்த ஊரில் வீடு கட்ட முயலும் நாயகன், அதற்கு தடையாக நிற்கும் காதல், பல இடைஞ்சல்களை கொடுக்கும் இந்த சமூகம், இதை எல்லாம் எதிர்கொண்டு அவர், தான் நினைத்ததை சாதித்து முடித்தாரா என்பதைத்தான் உணர்வுபூர்வமாக அதே சமயம் காமெடி கலந்து கொடுத்து இருக்கிறார்கள்.