படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, சினிமாவை தாண்டி பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட சில தொழில்களை தொடங்கி நடத்தி வருகிறார். அதோடு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் அவ்வப்போது படங்களும் தயாரிக்கிறார். இந்நிலையில் தற்போது சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தங்களது பங்களாவை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹோம் ஸ்டுடியோவாக மாற்றி இருக்கிறார்கள் .
7000 அடி பரப்பளவு கொண்ட இந்த ஸ்டுடியோவை நிகிதா ரெட்டி என்பவர் சிறப்பான உள் கட்டமைப்புடன் கைவினைப் பொருட்களால் பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார். இந்த ஹோம் ஸ்டுடியோவை தாங்கள் நடத்தி வரும் பிசினஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங் நடத்துவதற்கு மற்றும் நண்பர்களுடன் சந்திப்பு நடத்துவதற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த ஸ்டுடியோ குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது.