'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. அந்த காலக் கதை என்பதால் சில முக்கிய காட்சிகளை அங்கு எடுத்து வருகிறார்களாம். தமிழகத்தில் உள்ள பல இடங்கள் பழைய தோற்றத்திலிருந்து மாறிவிட்டது. ஆனால், இலங்கையில் சில இடங்கள் இன்னும் பழமை மாறாமல் உள்ளதால் கதைக்கேற்றபடி அங்கு படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தில் மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாசில் ஜோசப் நடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் இலங்கை படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளாராம். அதர்வா சம்பந்தப்பட்ட காட்சிகளின் இலங்கை படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். சிவகார்த்திகேயன், ரவி மோகன், பசில் ஜோசப் ஆகியோருடைய காட்சிகள் படமாகி வருகிறதாம்.
'பராசக்தி' படப்பிடிப்பில் நடிகர்களுடன் வெளியில் செல்லும் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த இயக்குனர் சுதா கொங்கரா விரைவில் இலங்கை புகைப்படங்களையும் பகிர வாய்ப்புள்ளது.




