நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் சமந்தா 'டிரலலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். கனகவல்லி டாக்கீஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து முதல் படமாக 'சுபம்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷ்ரியா கொந்தம், சரண் பேரி, ஷாலின் கொன்டேபுடி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரவானி ஆகிய ஆறு பேர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'சினிமா பன்டி' படத்தை இயக்கிய பிரவீன் கன்ட்ரேகுலா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகளும் நிறைவடைந்து படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக அங்கேயே செட்டிலானவர் சமந்தா. அதனால் அவரது முதல் படத் தயாரிப்பை தெலுங்குப் படமாகவே எடுத்துள்ளார்.




