சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நடிகர் சோனு சூட் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர். தமிழிலும் சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜயகாந்த் உடன் ‛கள்ளழகர்' படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
தற்போது அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்த் உடன் ‛கள்ளழகர்' படத்தில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது, "கள்ளழகர் படத்திற்கு நான் சரியாக இருப்பேன் என விஜயகாந்த் முடிவெடுத்தார். எனக்கு சினிமா சண்டை போட தெரியாது என்பது தெரிந்தவுடன் ஒரு மாத காலம் படப்பிடிப்பை தள்ளி வைத்தார். அவரது கவனிப்பில் முதல் படத்திலேயே ராஜ மரியாதை பெற்றவன் நானாகதான் இருப்பேன். மொழி கடந்த அன்பை அவரிடம் பெற்றேன். உபசரிப்பில் நானும் அவரைப் பின்தொடருகிறேன். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன் விஜயகாந்த். அவர் கடவுளின் குழந்தை". இவ்வாறு தெரிவித்துள்ளார்.