லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் ‛அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்கவில்லை.
சமீபத்தில் ‛சுழல் 2' வெப் தொடரில் நடித்து அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது, " என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். நான் மக்களை உன்னிப்பாக கவனிப்பவள். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. மனதில் பல கதைகள் இருந்தாலும் அவற்றை எழுத்தில் வடிக்க முடியவில்லை. அடுத்த 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.