'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் |
ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார்.
ஜெய்பூரில் நேற்றைய தினம் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான IIFA டிஜிட்டல் விருது விழாவில் பங்கேற்ற நடிகை கிர்த்தி சனோன் இத்திரைப்படம் தொடர்பாக பேசுகையில், ''ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷுடன் தற்போது 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். டில்லியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு நான் மீண்டும் வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஓர் அழகான திரைப்படம். அத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன் நான் நடித்திராத ஒன்று.
எனக்கு காதல் படங்கள் தான் மிகவும் பிடித்த ஜானர். இத்திரைப்படமும் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக தயார் செய்துள்ளார்கள். தனுஷூடன் முதல் முறையாக இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று. அதுபோல திரைப்படமும் அற்புதமாக தயாராகி வருகிறது. நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.