லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பில் நயன்தாரா நடித்து, வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. நயன்தாராவே நாயகியாக தொடருகிறார். சுந்தர் சு இயக்குகிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை விழாவே சென்னையில் இன்று(மார்ச் 6) சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாய் நடந்தது. இதற்காக பிரத்யேக செட் போட்டு விழாவை நடத்தினர்.
விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கேஎஸ் ரவிக்குமார், ரெஜினா, அபிநயா உள்ளிட்ட பலர் திரைப்பிபலங்களும் பங்கேற்றனர். விழாவிற்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் நயன்தாரா அரைமணிநேரம் தாமதமாகவே வந்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர் கேரவனில் அமர்ந்து ரெடியானார். இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பொறுமையிழந்தனர். படத்தின் பூஜை நடக்கும் முன்பே ஜெயம் ரவி, தாணு ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி சென்றனர்.
பின்னர் 10.30 மணிக்கு விழாவிற்கு வருகை தந்தார் நயன்தாரா. பின்னர் படத்தின் பூஜை நடந்தது. தொடர்ந்து படத்தின் முதல் ஷாட்டும் படமாக்கப்பட்டது.