என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி |
தமிழ் சினிமாவில் திறமையான இளம் இயக்குனர்கள் அதிகமில்லை. ஒரு படம் ஹிட் கொடுத்தால் அடுத்த படத்தில் ஏமாற்றம் தந்துவிடுகிறார்கள். தொடர்ச்சியாக நான்கைந்து வெற்றிப் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் குறைந்துவிட்டார்கள்.
அறிமுகமாகும் இயக்குனர்கள் பலருக்கும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். ஆனால், அப்படியான வாய்ப்பு எளிதில் கிடைத்து விடுவதில்லை. இருந்தாலும் சில திறமையாளர்களுக்கு மட்டுமே அப்படியான வாய்ப்பு அமைந்து விடுகிறது.
'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு அப்படியான அட்வான்ஸ் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் சிலம்பரசன். 'டிராகன்' படம் வெளிவருவதற்கு முன்பே அஷ்வத்தின் திறமையை அறிந்து தனது 51வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். சிம்பு நம்பியதைப் போலவே 'டிராகன்' படமும் பெரும் வெற்றி பெற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதனால், சிம்பு - அஷ்வத் மாரிமுத்து இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 'ஓ மை கடவுளே, டிராகன்' என அடுத்து சிம்புவின் 51வது படத்தையும் வெற்றிகரமாகக் கொடுத்து அஷ்வத் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.