20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? |
'புஷ்பா 2' படம் மூலம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் பான் இந்தியா ஹீரோ அந்தஸ்துக்குப் போய்விட்டார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் குறித்து உறுதியான எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா, அல்லது தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், சமீபத்திய அப்டேட் படி அட்லீ இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார் எனச் சொல்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக அப்படம் உருவாக உள்ளதாம். படத்தில் போர்வீரன் ஆக நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். அதற்காக வெளிநாடு சென்று ஒரு மாதம் பயிற்சியும் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் இப்படத்தின் பணிகள் ஆரம்பமாகும் என்றும் 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜான்வி கபூர் படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.