டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
கன்னடத் திரையுலகில் பிரபல நடிகர்கள் யாருமின்றி அன்றைய புதுமுக நடிகர்களை வைத்தே தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான் “பூதய்ய ந மக அய்யு” என்ற திரைப்படம். 1974ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கதையை எழுதிய கோரூர் நாராயணசாமி அய்யங்கார் வாழ்ந்த கலசபுரா என்ற கிராமத்திலேயே இந்தக் கன்னடத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பெரிய வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்த இத்திரைப்படத்தைப் பார்த்த ஜெமினி ஸ்டூடியோ எஸ் எஸ் பாலன், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்தக் கன்னடத் திரைப்படத்தின் கதையை வாங்கினார். ஏற்கனவே ப்ரூவ்டு சப்ஜெக்டில் சில மாற்றங்கள் செய்து வெளியிட்ட “ஒளிவிளக்கு” திரைப்படம் தந்த நல் அனுபவம் இந்தக் கன்னடத் திரைப்படத்தையும் தமிழில் தயாரிக்க அவரை உத்வேகப்படுத்தியது.
கன்னடத் திரைப்படம் எங்கு தயாரிக்கப்பட்டதோ அதே கலசபுரம் கிராமத்திற்கே தனது படக்குழுவினருடன் சென்று படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் எஸ் எஸ் பாலன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்க திட்டமிட்டிருந்ததால் மிகுந்த பொருட் செலவில் கலசபுரம் என்ற கிராமத்தில் 80ஆயிரம் ரூபாய் செலவில் கட்டடம் ஒன்றை கட்டி, கதைப்படி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அதை தீயிட்டுக் கொளுத்தியுமிருந்தனர். சூழ்நிலைகள் காரணமாக சிலர் ஆவேசம் அடைந்து, அண்டை அயலாருடன் வெறுப்பை வளர்த்து, அமைதியை சிதைத்து அழிவிற்கு வித்திடுகின்றனர்.
உண்மையில் பார்க்கப் போனால் உலகில் எல்லோரும் நல்லவரே என்ற கருத்தினை சொல்ல முற்படுவதுதான் இத்திரைப்படத்தின் கரு. ஆகவே தமிழில் தயாரித்து, இயக்கிய எஸ் எஸ் பாலன் இத்திரைப்படத்திற்கு “எல்லோரும் நல்லவரே” என்றே பெயரிட்டிருந்தார். 1975ல் வெளிவந்த இத்திரைப்படம் கன்னடத்தில் மட்டுமே வெற்றியை சுவைத்தது. தமிழில் தோல்வியையே சந்தித்தது.