நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளார்கள். இந்த டீசரில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அஜித்.
இந்த படத்துக்காக எதிரும் புதிரும் படத்தில் ராஜூ சுந்தரம்- சிம்ரன் நடனமாடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற வித்யாசாகரின் இசையில் உருவான பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து அதை ஒரு ஆக்ஷன் காட்சியில் இணைத்திருந்தார். அதேபோன்று இந்த பாடலையும் குட் பேட் அக்லி படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சிகள் இணைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளார் என்றும், இவர்களுக்கு இடையேயான ஒரு பாடல் காட்சிக்காக தான் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தான்' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.