தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா குறித்த படிப்பை படித்துவிட்டு கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள ஜேசன் சஞ்சய் அதையடுத்து லைகா நிறுவனத்தில் ஒரு கதை சொல்லி, அதில் நடிப்பதற்கு பல நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்தவர் இறுதியில் சந்தீப் கிஷனிடம் சொல்லி ஓகே செய்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருடக்கணக்கில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாததால் இப்படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது வெளியே வந்த அவரிடத்தில் , விஜய் மகன் படத்தில் நடிக்கிறீர்களே. படப்பிடிப்பு தொடங்கி விட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சந்தீப், ‛‛விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். ஜேசன் சஞ்சய் என்று அவரது பெயரை சொல்லுங்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு சிறந்த படமாக வரும் என்று நம்புகிறேன்'' என்றார்.