வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
இசையின் ராஜாவாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை அரங்கேற்றி வருகிறார். இதுதவிர சிம்பொனி இசை பணியிலும் உள்ளார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 8ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்ற உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி, அவருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இளையராஜாவை சந்தித்த வீடியோவை பகிர்ந்து, ‛‛இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!'' என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா நன்றி
‛‛முதல்வர் ஸ்டாலின், தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!'' என இளையராஜா வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.