வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் |
தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அடுத்ததாக 'இட்லிக்கடை' படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், 'குபேரா' என்ற தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் தனுஷூடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா உள்பட பலர் நடிக்கிறார்கள். சேகர் காமுலா இயக்குகிறார்.
இந்த நிலையில் 'குபேரா' டைட்டிலுக்கு தெலுங்கு இயக்குனரும் தயாரிப்பாளருமான கரிம கொண்ட நரேந்தர் என்பவர் சொந்தம் கொண்டாடினார். அதேபெயரில் 2023ல் டைட்டிலை பதிவு செய்து, படத்தை எடுத்துவருவதாகவும், இந்த பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும் என்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத குபேரா படக்குழு, தற்போது அதே பெயருடன், படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 20ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். முன்னதாக ஏப்.,10ம் தேதி தனுஷின் 'இட்லிக்கடை' படம் ரிலீசாகிறது.