நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
சமீபத்தில் வெளியான 'பயர்' படத்தில் பாலியல் குற்றவாளி காசியாக நடித்த பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கும் படம் 'ரன்னர்'. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பாலாஜி ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார். சிதம்பரம் ஏ.அன்பழகன் இயக்குகிறார். ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் 'பாக்சர்' மற்றும் 'கொட்டேஷன் கேங்க்' படங்களை தயாரித்திருந்தது. துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், தர்ஷன் ரவி குமார் இசை அமைக்கிறார்.
இயக்குநர் சிதம்பரம் அன்பழகன் இப்படம் குறித்து கூறியதாவது: உலக அளவில் உள்ள பல்வேறு ஸ்பிரிண்டர்களின் (வேக ஓட்ட வீரர்கள்) உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. நாயகன் பாலாஜி முருகதாஸ் இத்திரைப்படத்துக்காக கடந்த 6 மாதங்களாக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து தீவிரமாக வேக ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார். அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாக பிரதிபலிக்கும், என்றார்.