கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சீசன் 4ல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் மாடலிங் செய்து வந்த பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் முதல் ரன்னர் அப் ஆக வந்தார்.
“தங்க மீன்கள், குற்றம் கடிதல், தரமணி, அண்டாவ காணோம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஜே சதீஷ்குமார் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகி வரும் 'பயர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பாலாஜி. காயத்ரி ஷான், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
நேற்று எக்ஸ் தளத்தில் பாலாஜி திடீரென, “பயர்' என்ற படத்தில் நடித்தேன். ஜே சதீஷ்குமார் எனக்கு ஒரு பைசா கூட இதுவரையில் தரவில்லை,” என கெட்ட வார்த்தை ஒன்றை சேர்த்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு 'அட்வான்ஸ் கூட வாங்கவில்லை,” என்று பதிலளித்துள்ளார்.
தேசிய விருது வென்ற படத்தின் தயாரிப்பாளர் இப்படி சம்பளமே தரவில்லையா என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.