சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் பாலாஜி முருகதாஸ். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குள்ளாகி சமீபத்தில் வரவேற்பை பெற்ற பயர் படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்துள்ளார். மாடலிங்கில் தன் கேரியரை ஆரம்பித்த இவர் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அதன் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டார். இதில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டமும் வென்றார். தற்போது பயர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸ் அண்மையில் மாடலிங் மற்றும் சினிமா துறையில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், 'ஆரம்பத்தில் மாடலிங் வாய்ப்பு தருவதாக சொல்லி வேறு படம் எடுக்க என்னை தயார் செய்தார்கள். மாடலிங் வாய்ப்பு கேட்கும் சில இடங்களில் வேறு ஒரு விஷயத்தை என்னிடம் எதிர்பார்த்தார்கள். ஓப்பனாகவும் கேட்டார்கள். அதை இப்போது நான் இங்கே சொல்ல முடியாது. எனக்கு பின்னாடி பேசியவர்களுக்கும், தூரோகம் செய்தவர்களுக்கும் என்னுடய அடுத்த படம் தான் பதில். நான் வளரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நான் இப்படியே இருக்கமாட்டேன். எல்லா தடைகளையும் தகர்த்து வெற்றி பெறுவேன்' என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டால் ஒரு கோடி கிடைக்கும் என நினைத்து கலந்து கொண்டேன். ஆனால், எனக்கு அவர்கள் 45 லட்சம் தான் சம்பளமாக தந்தார்கள் என்றும் அந்த நிகழ்ச்சி மேடையிலேயே பாலாஜி முருகதாஸ் ஓப்பனாக கூறியுள்ளார்.