போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி | சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து |
சமீபகாலமாகவே சினிமா பிரபலங்கள் பலரின் சமூக வலைதள கணக்குகள் அதிலும் குறிப்பாக எக்ஸ் கணக்குகள் அடிக்கடி ஹேக்கிங்கிற்கு ஆளாகின்றன. அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும் தன்னால் இப்போது வரை அதி மீட்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இசையமைப்பாளர் டி.இமானின் எக்ஸ் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார் இமான்.
இது குறித்து அவர் கூறும்போது, “எனது எக்ஸ் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் எனது ஈமெயில் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்றி இருக்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் ஒரு பதிவையும் போஸ்ட் செய்திருக்கிறார்கள். தற்போது எக்ஸ் வலைதள டீமுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தி உள்ளேன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் இருந்து வருவதால் என்னை பின்தொடர்பவர்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு இன்றியமையாதது. என்னுடைய எக்ஸ் கணக்கில் ஏதாவது தவறான பதிவுகள் வந்தால் அது என்னை பொறுத்தது அல்ல. அதனால் தயவு செய்து அவற்றை புறக்கணித்து விடுங்கள் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.