நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ், 'சாஹோ' என்ற படத்தில் நடித்தார், அந்த ஒரு படத்திற்காகவே கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஒதுக்கி வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை, அதேபோல அதற்கடுத்து மூன்று வருடம் கழித்து அவர் நடித்த 'ராதே ஷ்யாம்' படம் வெளியாகி அதுவும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து அந்த கொள்கையை தளர்த்திக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பது என்கிற புதிய பாலிசியை உருவாக்கி நடித்து வருகிறார் பிரபாஸ்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் மாருதி இயக்கத்தில் காமெடி ஜானரில் உருவாகி வரும் ராஜா ஸாப் என்கிற படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இன்னொரு பக்கம் ஹனுராகவ புடி இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே ஏற்கனவே அவரது நடிப்பில் வெளியான கல்கி மற்றும் சலார் படங்களின் இரண்டாம் பாகங்களிலும் அவர் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தான் அர்ஜுன் ரெட்டி மற்றும் ஹிந்தியில் வெளியான அனிமல் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்திலும் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
ஆனால் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தனது படத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு ஆஜானுபாகுவான கதாபாத்திரத்தில் நடிப்பது போன்று உருவாக்கி இருக்கிறாராம். அதனால் தொடர்ந்து அதே தோற்றத்தை மெயின்டைன் செய்தால் மட்டுமே படத்தில் அவரது தோற்ற வித்தியாசம் இல்லாமல் படமாக்க முடியும் என்பதால் ஸ்பிரிட் படத்திற்காக மொத்தமாக தேதிகளை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். அதனால் பிரபாஸ் தனது மற்ற படங்களை முடித்துவிட்டு வரும் வரையிலும் காத்திருக்க தயார் என்றும் பிரபாஸிடம் கூறியுள்ளாராம் சந்தீப் ரெட்டி வங்கா.