110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக டைரக்ஷனில் இறங்கி மோகன்லாலை வைத்து 2019ல் 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது 'எம்புரான்' என்கிற பெயரில் உருவாகி உள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளும் இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திர அறிமுகங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு அரசியல்வாதியின் மகளாக பிரியதர்ஷினி ராமதாஸ் என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மஞ்சு வாரியர். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் தொடர்கிறார். இந்த நிலையில் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து மஞ்சு வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிலாகித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய திரையுலக பயணத்தில் இந்த லூசிபர் திரைப்படமும் பிரியதர்ஷினி ராமதாஸ் என்கிற கதாபாத்திரமும் ரொம்பவே மறக்க முடியாதவை. ஒரு இயக்குனராக பிரித்விராஜை பொறுத்தவரை தனக்கு என்ன தேவை என்று தெரிந்து வைத்திருப்பதைப் போல தனக்கு என்ன தேவை இல்லை என்பது குறித்தும் தெளிவாகவே இருக்கிறார். அதனால் படப்பிடிப்பில் நடிகர்களை அவர் எளிதாக கையாள முடிகிறது. பல இயக்குனர்களிடம் பணியாற்றிய என்னை இது ஆச்சரியப்படுத்தியது. நிச்சயமாக எனக்கு பிடித்த பேவரைட் இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் பிரித்விராஜுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும்” என்று பிரித்விராஜின் டைரக்ஷன் திறமையை புகழ்ந்துள்ளார் மஞ்சு வாரியர்.