நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
வட இந்திய நடிகைகள் தமிழில் நடிப்பது புதிதல்ல. ஆனால் அவர்கள் பெரும்பாலும், மும்பை, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார் கயாடு லோகர்.
பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்று பின்னர் மாடல் உலகில் முன்னணியில் இருந்தவர் 'முகிலிப்பெட்டே' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். 'அல்லுரி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தற்போது 'இதயம் முரளி', 'டிராகன்' படங்களின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதயம் முரளி படத்தில் அதர்வா ஜோடியாகவும், டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகவும் நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதுகுறித்து கயாடு கூறும்போது "தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். 'இதயம் முரளி' தான் நான் ஒப்பந்தமாகிய முதல் தமிழ்ப்படம், ஆனால் இரண்டாவது ஒப்பந்தமாக 'டிராகன்' படம் முதலில் வெளிவருகிறது. இந்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.