எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து | சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் படங்கள் மோதல் |

இயக்குனர் எச்.வினோத் 'துணிவு' படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து செவன் ஸ்கிரீன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்கிடையில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு எச். வினோத்திற்கு வந்தது.
இதனால் தனுஷ் படத்திற்கு முன்பு விஜய் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதையடுத்து எச்.வினோத் தனுஷ் படத்தை இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் துவங்க தற்போது படக்குழு முடிவு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஜூலை 28ம் தேதி அன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பார்கள் என்கிறார்கள்.




