நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

1980களில் பிசியாக இருந்த ஹீரோயின்களில் முக்கியமானவர்கள் ராதா, சுஹாசினி, ஊர்வசி. ராதா இளமை ததும்பும் காதல் படங்களிலும், சுஹாசினி, ஊர்வசி குடும்ப பாங்கான படங்களிலும் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் மூவருமே அதிரடி ஆக்ஷன் ஹீரோயின்களாக நடித்த படம் 'அபூர்வ சகோதரிகள்'.
1983ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் 3 ஹீரோயின்களுடன் கார்த்திக், சுரேஷ், ஜெய் சங்கர், கே.ஆர்.விஜயா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தியாகராஜன் இயக்கி இருந்தார். பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பிலஹரி இசை அமைத்திருந்தார்.
ஜெய்சங்கர், கே.ஆர் விஜயா தம்பதிகளுக்கு 3 மகள்கள். எதிரிகளின் சதியால் ஜெய்சங்கர் ஜெயிலுக்கு போக, கே.ஆர்.விஜயா இறந்து விட சகோதரிகள் மூவரும் திசைக்கு ஒருவராக பிரிந்து விடுகிறார்கள். பிற்காலத்தில் சுஹாசினி போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார், ராதா திருடி ஆகிறார், ஊர்வசி கிளப் டான்சராகிறார். இந்த மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் கலர்புல் பாடல் காட்சிகள், இந்தி பாடல்கள் பாணியிலான மெட்டுகளில் பாடல்கள், ஹீரோயின்கள் போடும் அதிரடியான சண்டை காட்சி என படம் பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக வெளிவந்து வெற்றி பெற்றது.