ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் புகழ் பெற்றவர்களில் ஒருவர் மடோனா ஜெபாஸ்டின். 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கவன், ப.பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் படங்களில் நடிதார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்தார்.
சிலகாலம் தமிழ் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்த மடோனாவுக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' படம் திருப்பமாக அமைந்தது. இதில் அவர் அதிரடி ஆக்ஷனில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் பக்கம் கவனம் திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் காமெடி கலந்த காதல் படம் 'ஹார்ட்டின்'. டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கும் படம். 'மகான்', 'பேட்ட', 'ஜில் ஜங் ஜக்' படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க, மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு 'முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
ஹார்ட்டின் படம் குறித்து இயக்குநர் கிஷோர் குமார், கூறும்போது "ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.