மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சில படங்கள் வெளிவரும். ஆனால் இந்த ஆண்டு காதலர் தினம் வெள்ளிக்கிழமை வருவதால் 4 காதல் படங்கள் வெளிவருகிறது.
காதல் என்பது பொதுவுடமை
லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், காதல் என்பது பொதுவுடைமை. இந்திய சினிமாக்களில் பெரும்பாலும் பேசப்படாத டாப்பிக், 'தன் பாலின ஈர்ப்பு'. இதை கதையில் கருவாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. லென்ஸ் மற்றும் தலைக்கூத்தல் என்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் இயக்கி உள்ளார்.
2கே லவ் ஸ்டோரி
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் '2கே லவ் ஸ்டோரி'. இந்த படத்தில் ஜெகவீர என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். வினோதினி, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். 'வெண்ணிலா கபடி குழு'விற்கு பிறகு தான் இயக்கியிருக்கும் அருமையான படம் என்று சுசீந்திரனே கூறிவருகிறார். இன்றைய இளம் சமூகத்தின் காதல், நட்பு பற்றி பேசும் படம்.
கண்ணீரா
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள காதல் படம். வேலையும், சம்பளமும்தான் முக்கியம் என்று கருதும் காதலனிடம் இருந்து விலகும் நாயகியும், படிப்பும் தன் வளர்ச்சியும் முக்கியம் என்று கருதும் காதலியிடமிருந்து விலகி வரும் நாயகனும் காதலித்தால் என்ன நடக்கும் என்பது இந்த படத்தின் கதை. கதிரவென் இயக்கி நடித்திருக்கிறார். அவருடன் சாந்தினி கவுர், மாயா கிளம்பி, நந்தகுமார் நடித்துள்ளனர்.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்
பீஎம்.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கவுரி சங்கர் தயாரித்து இயக்கி உள்ள படம் 'காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்'. சரவணன், அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யாபாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, அகல்யா உள்பட நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார், து.மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 3 விதமான காதலை சொல்லும் படம்.
இந்த படங்களுக்கு போட்டியாக பழைய படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா, மின்னலே, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கின்றன. தியேட்டர்கள் கிடைப்பதை பொறுத்து இந்த படங்கள் சில விலகலாம், புதிதாக சில படங்கள் சேரலாம்.