படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் என முக்கியமான மூன்று சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக சேர்ந்த பின்புதான் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரிப்பது வழக்கம்.
கடந்த சில வருடங்களாகவே படங்களை வெளியிடுவதில் எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளிவருகின்றன. அவற்றில் பல படங்கள் ஒரு வாரம் வரை கூட தாக்குப் பிடிப்பதில்லை. திடீரென பெரிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்படுவதும், தள்ளி வைக்கப்படுவதும் மற்ற படங்களின் வெளியீட்டையும் பாதிக்கிறது. அந்த பெரிய படங்களுக்குத்தான் தியேட்டர்களும் முன்னுரிமை கொடுக்கின்றன.
நாளை பிப்ரவரி 14ம் தேதி 10 படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவந்தால் இருக்கும் 1000 தியேட்டர்களில் அத்தனை படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
ஒரு படத்தை எடுத்து முடிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தாலும், அவற்றை வெளியிடுவதில்தான் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் பொதுவான கருத்து. ஆனால், முக்கியமான மூன்று தயாரிப்பாளர் சங்கங்களும் இந்த வெளியீட்டுத் தேதி குறித்து ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கத் தவறிவிட்டன என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இனி வரும் காலங்களில் அதற்கு ஏதாவது சரியான வழியைச் செய்யவில்லை என்றால் முன்னணி நடிகர்கள் அல்லாத மற்ற படங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கங்களோடு, வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்காரர்கள் சங்கம் ஆகியோரும் இணைந்து பேசி இதற்கு ஒரு சுமூக முடிவை எட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.