என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விடாமுயற்சி' கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அடுத்தபடியாக ஆதிக்  ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். மேலும் தற்போது கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித்குமார், அடுத்தபடியாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. 
இந்த நேரத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' என்ற படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் ஏற்கனவே அஜித்தை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், இந்த கதையை இன்னும் மெருகேற்றி வையுங்கள். கார் ரேஸ் முடிந்து திரும்பியதும் இன்னொரு முறை கேட்டுவிட்டு பிடித்து விட்டால் இந்த கதையில் நடிக்கிறேன் என்று அஜித்குமார் கூறியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 
 
           
             
           
             
           
             
           
            