இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மிஷ்கின் இயக்கிய ‛முகமூடி' படத்தில்தான் சினிமாவில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்திக்கு சென்றபோதும், நடித்த படங்கள் தோல்வியாக அமைந்ததால், பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவுக்கு ‛டிஜே துவாடா, ஜெகநாதம், அரவிந்த சமேதா, அல வைகுண்ட புறமுல்லோ' உள்ளிட்ட பல படங்கள் வெற்றியை கொடுத்தன. அதன் பிறகு தான் மீண்டும் அவர் தமிழில் விஜய்யுடன் ‛பீஸ்ட்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தற்போது விஜய்யுடன் ‛ஜனநாயகன்', சூர்யாவுடன் ‛ரெட்ரோ', லாரன்ஸ் உடன் ‛காஞ்சனா- 4' போன்ற படங்களில் நடித்து வருகிறார் பூஜாஹெக்டே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தான் நடித்த அல வைகுந்த புறமுல்லோ என்ற தமிழ் படம் தனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் படம் என்று கூறியிருந்தார். ஆனால் இது தெலுங்கு படம் என்பதை அவர் தமிழ் படம் என்று கூறியதற்கு தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தார்கள். தெலுங்குக்கும் தமிழுக்கும் வித்தியாசம் கூடத் தெரியாமலா படங்களில் நடிக்கிறீர்கள் என்று சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்தார்கள். இந்த நிலையில், தான் சொன்னது தவறு என்று ஒப்புக்கொண்டுள்ள பூஜாஹெக்டே, ஏதோ தவறுதலாக அப்படி சொல்லி விட்டேன். தெலுங்கு சினிமாவிற்கு எப்போதும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று தெரிவித்து தெலுங்கு ரசிகர்களை சமாதானப்படுத்தி உள்ளார்.