இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த ராஜ்கிரண், நித்யா மேனன் போஸ்டர்கள் வெளியானதைத் தொடர்ந்து இதுவரை ரகசியமாக வைத்திருந்த அருண் விஜய் இப்படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். அருண் விஜய் பாக்சர் தோற்றத்தில் உள்ளது போல் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.