சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சமீபத்தில் நடைபெற்ற பாலிவுட் திரைப்படமான 'ச்சாவா' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா கலந்து கொண்டது ஹிந்தி திரையுலகில் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களையும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. காரணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது காலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் ராஷ்மிகா படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஆனாலும் இந்த ச்சாவா திரைப்படத்தில் தான் நடித்துள்ள ஏசுபாய் கதாபாத்திரம் தான் வாழ்நாளில் நடிக்க விரும்பியது போன்ற ஒரு மிகப்பெரிய கனவு கதாபாத்திரம் என்று அவ்வப்போது கூறி வந்தார் ராஷ்மிகா. இந்த நிலையில் ச்சாவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் எப்படியேனும் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய ராஷ்மிகா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு பயணித்து ச்சாவா பட விழாவில் கலந்து கொண்டார். அந்த விழா மேடையில் கால்களை நொண்டி அடித்தபடியே இன்னொருவரின் கைத்தாங்கல் உதவியுடன் வந்து ராஷ்மிகா பேசியது விழாவிற்கு வந்த அனைவரையுமே நெகிழ வைத்துவிட்டது.
நல்ல நிலையில் இருக்கும் பல நடிகைகளும் தங்களது பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுத்து ஒதுங்கிவிடும் நிலையில் இப்படி ஒரு சூழ்நிலையில் கூட ராஷ்மிகா வந்து கலந்து கொண்டது ரசிகர்களிடமும் அவர் மீதான மதிப்பை இன்னும் சில மடங்கு அதிகரிக்க செய்துவிட்டது. இந்த நிலையில் தன்னுடைய கால் எலும்பு முறிவு குறித்த எக்ஸ்ரே புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் காளில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர் கடந்த இரண்டு வாரங்களாகவே தனது சொந்தக் காலில் நிற்க முடியாத சூழலில் இருப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள் என்றும் ஒரு அன்பான அறிவுரையையும் அவர் கூறியுள்ளார்.